ஏழருவி திருமுருகர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 February 2023

ஏழருவி திருமுருகர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிங்குப்பம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஏழருவி திருமுருகர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா பொம்மிங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி வெங்கடேசன் மற்றும் ஏ கே மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாதையன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியுடன் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் திருமுருகன் அருள் வேண்டி 1008 பால்குடம் ஏந்தி ஸ்ரீ வேலன் சிலம்பு குழுவினரால் பழைய அத்திகுப்பம் புதிய அத்திகுப்பம் காமராஜ் நகர் சக்தி நகர் ஏகே மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பை சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து அபிஷேகம் செய்யப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலயத்திற்கு வந்து தரிசனம் பெற்று சென்றனர். இதனைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/