திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் காலையில் ஆய்வு இரவு தீர்வு மாவட்ட ஆட்சியர் அசத்தல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 February 2023

திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் காலையில் ஆய்வு இரவு தீர்வு மாவட்ட ஆட்சியர் அசத்தல்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இங்கு வரும் ஆதிதிராவிட நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் காலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார் அப்போது மாணவிகளுக்கு போர்வைகள் பாய் தலையணை அத்தியாவசிய தேவைகள் இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். கழிப்பறைகளை ஆய்வு செய்தார்.

அதன் பிறகு அத்தியாவசிய தேவைகள் குறித்து மாணவிகளுடன் கேட்டு அறிந்தார் அதனை தொடர்ந்து இன்று இரவு ஆதிதிராவிட நலத்துறை அரசினர் மாணவர் விடுதிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கினார். 66 மாணவிகளுக்கு பாய் தலையணை போர்வை என 25500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மாவட்ட ஆட்சியர் அனைத்து மாணவிகளுக்கும் தங்கள் கைகளால் வழங்கினார்.  


அதனைத் தொடர்ந்து குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை வைத்து தூய குடிநீரை மாணவிகளுக்கு வழங்கினார். மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுடைய மகிழ்ச்சியை  பகிர்ந்தனர். உடன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார். திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஜெயராம ராஜா இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/