திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளம் பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 March 2023

திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளம் பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவருக்கும் பெத்தவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்  திருமணம் நடைப்பெற்றுள்ளது.



இந்நிலையில் பெரியசாமி கட்டிட வேலைக்காக இன்று காலை பெங்களூர் சென்ற நிலையில்  இளம் பெண் நந்தினி திகுவாபாளையம் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்துள்ளார்..


உடனடியாக இதுகுறித்து அறிந்த நந்தினியின் பெற்றோர் தனது மகளின் இறப்பில்  சந்தேகம் இருப்பதாக கூறி  திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


புகாரின் பேரில் காவல்துறையினர்  மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் இந்நிகழ்வு குறித்து வழக்குபதிவு செய்து நந்தியின் கணவர் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம்  விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..



திருமணம் ஆன 10 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/