புதிய பகுதி நேர நியாய விலைக்கடையை திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி MLA. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 March 2023

புதிய பகுதி நேர நியாய விலைக்கடையை திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி MLA.


திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம், சந்திரபுரம் ஊராட்சி, கிழக்குமேடு பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடையை திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி MLA சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.



இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/