திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த உசேத் வாஹப் என்பவருக்கு Dear user your ICICI Bank account will be blocked 09.30 pm today, please update your PANCARD immediately. click the link என வந்த குறுஞ்செய்தியை நம்பி அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து Pancard- மற்றும் Personal Details ஐ அப்டேட் செய்தவுடன் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூபாய்.1,49,900/- பணத்தை நூதனமாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் எடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து உடனே சைபர் கிரைம் Helpline 1930 ஐ தொடர்பு கொண்டு பணம் பறிபோனது சம்பந்தமாக புகார் அளித்ததன் பேரில் திருப்பத்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் வழிகாட்டுதலின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் கொண்ட குழுவினர் வழக்கு பதிவு செய்து மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி அவர் இழந்த ரூபாய்.1,49,900/- பணத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட நபரிடம் அவர் இழந்த பணத்தை அவருடைய வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணம் நேரில் அழைத்து ஒப்படைத்தார். புகாரின் பேரில் துரித நடவடிக்கை எடுத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் முஜம்மில் அஹ்மத்

No comments:
Post a Comment