தேவலாபுரம் ஸ்டார் பள்ளியின் 28வது ஆண்டு விழாவில் அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 March 2023

தேவலாபுரம் ஸ்டார் பள்ளியின் 28வது ஆண்டு விழாவில் அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.


ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்டார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 28ஆம் ஆண்டு விழாவும் துளிர் திறனறி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  


விழாவிற்கு தேவலாபுரம் எட்டியம்மன் கோயில் அறங்காவலர் எம்.பெருமாள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக ஆசிரியை எஸ்.பூவழகி வரவேற்று பேசினார்.  தலைமையாசிரியை ஜெயசுதா ஆண்டறிக்கை வாசித்தார்.  


திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை துணை இயக்குநர் (ஓய்வு) டி.இளவரசன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் மாநில கருத்தாளர் பி.அச்சுதன், தேவலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆர்.ஜான்சிராணி ராஜேஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.


விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மாணவர் திறனறி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். 


போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  முடிவில் பள்ளி ஆசிரியை எஸ்.அஞ்சலி நன்றி கூறினார்.


- வேலூர் தலைமை செய்தியாளர் மு பாக்கியராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/