டாக்டர் கேசவ பலிராம் ஹெக்டேவார் பிறந்தநாள் முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரூராட்சி கவுன்சிலர் குரு ஷேவ் வழங்கினார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 March 2023

டாக்டர் கேசவ பலிராம் ஹெக்டேவார் பிறந்தநாள் முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரூராட்சி கவுன்சிலர் குரு ஷேவ் வழங்கினார்.


நாட்றம்பள்ளி அருகே தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டும் ஆர் எஸ் எஸ் ஸ்தாபகர் டாக்டர் கேசவ பலிராம் ஹெக்டேவார் பிறந்தநாள் முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரூராட்சி கவுன்சிலர் குரு ஷேவ் வழங்கினார்.

நாட்றம்பள்ளி அடுத்த அதிபெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த நாட்டம்பள்ளி பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் குருசேவ்.   இவர் அவர் பகுதியைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டும் ஆர் எஸ் எஸ் ஸ்தாபகர் டாக்டர் கேசவ பலிராம்  ஹெக்டேவார்  பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கும் ஸ்ரீவாரி அகர்பத்தி கம்பெனியில் பணியாற்றி தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  


இதில்  இனிப்புகள் மற்றும் மளிகை பொருட்கள் சில்வர் தட்டு என அனைவருக்கும் வழங்கினார்.  இந்த விழாவில் பங்கேற்ற முதியவர்களை உகாதி பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம் என இளம் தலைமுறைக்கு எடுத்து கூற வினவினார் அதை தொடர்ந்து பேசும்போது உணவில் அறுசுவை உணவு எப்படி இருக்கிறதோ அதேபோன்று வாழ்க்கையில் இன்பம் துன்பம் என அனைத்தும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்த்துவது தான் இந்த யுகாதி பண்டிகை என்றும் கூறினார்.


-மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/