திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மான்கானூர் தக்டிவட்டம் பகுதியைச்சேர்ந்தவர் சுப்பிரமணி இவருடைய மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3.மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மனைவி ஈஸ்வரி இயற்கை மரணம் அடைந்தார்.

மனைவி இறந்த துக்கத்தில் வேதனையடைந்த சுப்பிரமணிஅவருக்கு சொந்தமான நிலத்தில் 15 சென்ட் இடத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் 6.அடி உயர ஈஸ்வரியின் திருவுருவ சிலையை நிறுவி கோயில் கட்டி வணங்கி வருகிறார்.
இன்நிலையில் இன்று அவரது மனைவிக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் 500 பேருக்கு சேலையும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார், இதனைக் காண அப்பகுதி மக்கள் படையெடுத்து வியப்புடன் வந்து செல்கின்றனர் கட்டிய மனைவிக்கும் பெற்ற பிள்ளைக்கும் உணவு அளிக்காத காலத்தில் இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் வணங்கிவருவது அப்பகுதி மக்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment