சுண்ணாம்புக்குட்டை 63-ம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. 250க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 31 March 2023

சுண்ணாம்புக்குட்டை 63-ம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. 250க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.


திருப்பத்தூர் மாவட்டம்  நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் 63-ம் ஆண்டு  மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடின. 


இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 50000  இரண்டாவது பரிசாக 40009 மூன்றாவது பரிசு 35000 உட்பட மொத்தம் 53 பரிசுகள்   வழங்கப்பட்டது. 


திருவிழாவில் சுமார் 3000க்கும் மேற்பட்ட காளையர்கள் உட்பட பொதும்மளும் பங்கேற்றனர். இந்த எருது விடும் திருவிழாவிற்கு வருவாய் துறை கோட்டாட்சியர் லட்சுமி வட்டாட்சியர் குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து அனுமதி கொடுத்தனர்.


மற்றும் தீயணைப்பு துறை மருத்துவ துறை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது, மேலும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/