திருப்பத்தூர் மாவட்டம், காவலூர் சத்திரத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா நர்சரி & பிரைமரி பள்ளியில் இன்று பள்ளியின் தாளாளர் திரு.S.ராஜா அவர்களின் தலைமையில் பட்டமளிப்பு மற்றும் விளையாட்டு நாள் விழா நடைபெற்றது.
முன்னதாக S. தேவராஜ் அனைவரையும் வரவேற்றார். விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி மற்றும் வாசுதாமோதிரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, ஊக்கமளிக்கும் விதத்தில் உரையாற்றி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
உடன் நாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.மேகலா திருப்பதி மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர். விழாவின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமதி.R.தமிழரசி நன்றி தெரிவித்தார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment