திருப்பத்தூர் நகராட்சி 17வது லட்சுமிநாதன் தெரு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலைக்கடை அமைக்கும் பணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெவ்வேறு இடங்களில் நடந்தது, இதில் நல்லதம்பி எம்.எல்.ஏ, நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் துணைத் தலைவர் சபியுல்லா முன்னாள் நகர மன்ற தலைவர் அரசு நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா 17 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் பிரேம்குமார் 25வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பரிவன பேகம் கட்சி நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி சந்திரசேகரன் கவுன்சிலர் கோபி மற்றும் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பார்த்திபன் கவுன்சிலர் சுதாகர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment