இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் கேக் வெட்டி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பாட்டு போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பரிசுகளை வழங்கினர்.

அதேபோல் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் உலக மகளிர் தின விழா பால்நாங்குப்பம் நந்தினி மஹால் திருமண மண்டபத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், பெண் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து குழந்தைகளின் நாட்டிய நடன நிகழ்ச்சி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தில் பிறந்த நாள் கொண்டாடிய உதவி ஆய்வாளருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். சிறப்பாக பணியாற்றிய பெண் உதவி ஆய்வாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment