சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
தொகுப்பூதியம் மற்றும் சிறப்பக்காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர் புற நூலகர் உள்ளிட்டுவருக்கு காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும்.
7-வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும் என்று கோரி அனைத்து ஆசிரியர் ஒன்றிய வட்டார மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு அழைப்பாளராக தியோடர் ராபின்சன் கலந்து கொண்டார். காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை

No comments:
Post a Comment