திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பன்னீர்செல்வம் நகர், புதுமனை பகுதியை சேர்ந்த செங்கல் சூளையில் பணிபுரியும் இளைஞர் ஜெயசீலன் என்பவர் தலையில் காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த போது குடிபோதையில் இருந்ததால் மருத்துவர் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பணியில் இருந்த எலும்பியல் மருத்துவர் கார்த்திக் என்பவரிடம் குடிபோதையில் இருந்த இளைஞர் ஜெயசீலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் மருத்துவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் செவிலியர்கள் மற்றும் நோயாளிகளிடயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து மருத்துவர் கார்த்திக் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ஜெயசீலணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment