உதயநிதி நடித்து வெளியான கண்ணை நம்பாதே திரைப்படத்திற்கு டிக்கெட் இலவசம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 March 2023

உதயநிதி நடித்து வெளியான கண்ணை நம்பாதே திரைப்படத்திற்கு டிக்கெட் இலவசம்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமசாமியார் தெரு பகுதியில் இயங்கி வரும் இயங்கி வரும் சி கே சி திரையரங்கில் கண்ணை நம்பாதே திரைப்படம் திரையிடப்பட உள்ளது.


இதனைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளரும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நகர தலைவருமான தமிழ்மணியின்  தாராளத்தில் கண்ணை நம்பாதே திரைப்படத்தை காண வருகை தரும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் திரைப்படத்தை காண டிக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது.



நகர செயலாளர் ராஜேந்திரன் நகர மன்ற தலைவரின் கணவர் வெங்கடேசன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் திரையரங்கிற்கு வருகை புரிந்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.


பொதுவாக உச்ச நட்சத்திரங்கள் நடித்து வெளியாகும் திரைப்படங்களின் முதல் காட்சிக்கு ரசிகர் மன்றங்கள் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வது வழக்கம். ஆனால் உதயநிதி ரசிகர் மன்ற நகர தலைவர் இலவசமாக டிக்கெட்டை கொடுப்பது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரைப்படத்தை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து சென்றனர்.


- மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/