திருப்பத்தூர் மாவட்டத்தில் என்னும் எழுத்தும் திட்டத்தை கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 March 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் என்னும் எழுத்தும் திட்டத்தை கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்து என்னும் எழுத்தும் திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து என்னும் எழுத்தும் பதாகையில் அமைச்சர் கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கர பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜி (ஜோலார்பேட்டை), வில்வநாதன் (ஆம்பூர்), நல்லதம்பி (திருப்பத்தூர்) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து மொழிகள் ஆய்வகத்தை திறந்து வைத்து எண்ணும் எழுத்தும் பரப்புரை வாகனத்தை பள்ளிக் அமைச்சர் கொடியசைத்து  துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அறிவொளி லதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ் குமார், நகர மன்ற தலைவர்கள் உமாபாய் சிவாஜி கணேசன்(வாணியம்பாடி) ஏஜாஸ் அஹமத்(ஆம்பூர்), நகர கழக செயலாளர்கள் ஆறுமுகம்(ஆம்பூர்), வி.எஸ்.சாரதி குமார்(வாணியம்பாடி) உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சென்னையில் இருந்து ரயில் மூலம் ஆம்பூருக்கு வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி, நகர மன்ற தலைவர்கள் ஏஜாஸ் அஹமத், உமாபாய் சிவாஜி கணேசன், வாணியம்பாடி நகர கழக செயலாளர் வி.எஸ்.சாரதி குமார், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/