திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அச்சமங்கலம் அடுத்த சாமுடி வட்டம் பகுதியில் இன்று மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட காளையார்கள் மற்றும்5000 த்திர்க்கும் மேற்பட்ட பார்வையாலர்கள் கலந்து கொண்டு திருவிழாவை கண்டுகளித்தனர்.

இந்த நிலையில் அச்சமங்கலம் அடுத்த பழனி வட்டம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் விக்ரம் 17 வயது சிறுவன் மாடு முட்டி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பின்னர் எருது விடும் திருவிழாவில் இருந்த மருத்துவக் குழுவினர் விக்ரமின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரா பாண்டியன் மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார், மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விக்ரமின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறிய காட்சி அனைவரையும் கண்கலங்க செய்தது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment