நாட்டறம்பள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் 200 கிராம் கஞ்சா கொண்டு வந்த மூன்று பேர் கைது! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 March 2023

நாட்டறம்பள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் 200 கிராம் கஞ்சா கொண்டு வந்த மூன்று பேர் கைது!

நாட்டறம்பள்ளி  பகுதியில் இருசக்கர வாகனத்தில் 200 கிராம் கஞ்சா கொண்டு வந்த மூன்று பேர் கைது! இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல்.



திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறாம்பள்ளி அடுத்த அக்ரகரம் பகுதியில் நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தி ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.


நாட்டறம்பள்ளி அடுத்த கருணாநிதி பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் வசந்தகுமார் சண்முகம் மகன் சரத்குமார் ஜெயச்சந்திரன் மகன் அன்பரசன் ஆகிய மூன்று பேரும் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தனர்.


அப்போது அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிராம் அளவிலான கஞ்சாவை கைப்பற்றினர், மேலும் இவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து கொண்டு வந்தது தெரிய வந்தது.


இதனை அடுத்து நாட்றம்பள்ளி போலீசார் இரண்டு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/