புதிய மின் பதையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த MLA. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 March 2023

புதிய மின் பதையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த MLA.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டம் 33/11 கிவோ துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் 11 கிவோ கொடையாஞ்சி மின் பாதையின் 61 கம்பங்கள் பாலாற்றில் உள்ளதால் அடிக்கடி வெள்ளத்தின் போது 61 கம்பங்களின் மின்பாதைகள் பாதிக்கப்பட்டு அடிக்கடி மின்தடை கடுமையாக பாதிக்கப்படுவதால் வெள்ளம் வந்தாலும் பாதிக்காத வகையில் 61 மின் கம்பங்கள் நடப்பட்டு சுமார் 3 கிமிக்கு புதியதாக மின்பாதை மற்றும் 4 pole DP ல் மின்பாதையினை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி பயன்பாட்டிற்காக கொண்டு வந்தார்.


இதனால் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் நகராட்சி, உதயேந்திரம் பேரூராட்சி, சுகர்மில், இரயில்வே, அம்பலூர், ஆகிய பகுதிகளிக்கான நீரேற்றம் மின் மோட்டார்கள் நிலையங்களுக்கு 24 மணி நேரம் மின்சாரம் இனி தடையில்லாமல் கிடைக்கும்.


இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை பொறியாளர் ஜெய்னுலாப்தீன், செயற்பொறியாளர்கள் சம்பத், பாட்சா முகமது, உதவி செயற்பொறியாளர்கள் ஏங்கல்ஸ், இரவிச்சந்திரன், உதவி மின்பொறியாளர் சத்தியமூர்த்தி, ஏழுமலை, ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர்,
உதயேந்திரம் பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏ.பி.முருகேசன், எம்.பாரி மற்றும் மின்சார வரிய பணியாளர்கள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/