திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் நாட்டாமை தமிழரசன் துணை நாட்டாமை பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 60,000 ரூபாயும் இரண்டாவது பரிசாக 45,000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 31000 ரூபாய் என மொத்தம் 46 பரிசுகள் வழங்கப்பட்டன.

விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த எருது விடும் திருவிழாவில் சுமார் 5000க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றனர். இந்த எருது விடும் திருவிழா வருவாய் துறை அதிகாரிகளின் முறையான அனுமதியுடன் தீயணைப்பு துறை மருத்துவ துறை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது.
மேலும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment