சித்தப்பா போலி பத்திரம் செய்து சொத்தை ஏமாற்றி விட்டதாக கூறி மகள் ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 March 2023

சித்தப்பா போலி பத்திரம் செய்து சொத்தை ஏமாற்றி விட்டதாக கூறி மகள் ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா.

திருப்பத்தூர் மாவட்டம் சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன்கள்  சம்பத் மற்றும் ராஜி இருவரும் அண்ணன் தம்பிகள் சம்பத்திற்கு சக்தி சத்தியா என்ற பிள்ளைகள் உள்ளனர்.

அதேபோல் ராஜிக்கு ரோஷினி என்ற பெண் பிள்ளையும் உள்ளனர். இந்த நிலையில் சம்பத் உயிரிழந்த நிலையில் சம்பத்திற்கு சொந்தமாக சுமார் 50 சென்ட் அளவிலான நிலத்தினை ராஜி போலி வாரிசு சான்றிதழ் தயார் ரோஷினி தான் வாரிசு என்று கூறி 50 சென்ட் நிலத்தை பத்திர பதிவு செய்துள்ளார்.


இந்த நிலையில் இதனை அறிந்த சம்பத் வாரிசுதாரர்கள்  சக்தி மற்றும் சத்யா இருவரும் தனது சித்தப்பா ராஜ் போலி பத்திரம் செய்து சொத்தை அபகரித்தது தெரிய வந்தது.


இதன் காரணமாக இன்று ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் சத்யா பத்திர பதிவு ரத்து செய்ய வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் சத்யா அங்கிருந்து கலைந்து சென்றார். காரணமாக ஜோலார்பேட்டை  சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/