திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் முன்னிட்டு வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து நிறுவனங்களும் பெயர் பலகையை தமிழில் ஐந்து மடங்கிலும் ஆங்கிலத்தில் மூன்று மடங்கிலும் பிறமொழிகளில் இரண்டு மடங்கிலும் எழுத்துக்கள் இருக்குமாறு பெயர் பலகை நிறுவ வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது அதன்படி பெயர் பலகை அமைத்து தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் பேசுகையில் வளம் நிறைந்த ஒரு மொழி உலக இலக்கியங்களில் கிட்டத்தட்ட 23 மொழிகளுக்கு தாய்மொழி தமிழ் மலையாளம் 10 நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரிந்த மொழி கன்னடம், தெலுங்கு, துலு,எதை எடுத்துக் கொண்டாலும் தமிழில் இருந்து பிரிந்த மொழி தான் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவன உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment