திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மழை நீர் மற்றும் கழிவுநீர் செல்லும் தரைப்பாலம் அமைக்கும் பணி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணி நடைபெற்று வருகிறது இன் நிலையில் பணியின்போது பிரதான குடிநீர் பைப் உடைந்து சேதம் அடைந்ததால் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள 36 வார்டு குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் செல்லாததால் ஆத்திரம் அடைந்த 36 வார்டு பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன், மதன் ரமணன்,கோபி, சிவா, அரவிந்தன் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் நாகு,கவுன்சிலர் சுதாகர்,கவுன்சிலர் கோபி, ரமேஷ், மற்றும் பொதுமக்கள்தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
உடனடியாக நகராட்சி சேர்மன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக உடைந்த குடிநீர் பைப்பை சரி செய்து முறையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வலியுறுத்திதின் அடிப்படையில் கலைந்து சென்றனர் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை

No comments:
Post a Comment