மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்ததால் 4 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிய கிராமம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 March 2023

மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்ததால் 4 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிய கிராமம்.

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் இவரது மகன் சந்தேஷ் இவர் கல்லூரி படிக்கும் போது நடுப்பட்டறையை சேர்ந்த மாற்று சாதி பெண்ணை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.


இந்நிலையில் சந்தோஷின் பெற்றோர் இந்த திருமணத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பின்னர் சமாதானம் ஆகி கொட்டாவூர் பகுதியில் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கொட்டாவூர் கிராம மக்கள் ஜெகதீசன் மற்றும் அவரது உறவினர்களான 4 குடும்பத்தை சேர்ந்தவர்களையும் மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறி கடந்த ஓராண்டுகளாக ஊர் திருவிழாவில் பங்கேற்க கூடாது எனவும், ஜெகதீசன் குடும்பத்தினர்  கோவிலில் பூஜைக்காக வைக்கப்பட்ட பொருட்களை தூக்கி வீசியும்,  ஊரில் யவரேனும் இறந்தால் துக்க நிகழ்ச்சியில் கூட பங்கேற்க கூடாது எனவும் கூறி ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.


மேலும்  ஜெகதீசனிடம்  அக்கிராம மக்கள் சிலர் சாதி ரீதியாக பேசி  அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளனர், இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் ஜெகதீசன் தனது இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் பகுதியில் இருந்து கொட்டாவூருக்கு வந்த போது கொட்டாவூர் கிராம மக்கள் சிலர் ஜெகதீசனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு  அவரை சராமரியாக தாக்கி அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர், மேலும் ஜெகதீசனின் உறவினரான பாலு என்ற இளைஞரையும் தாக்கியுள்ளனர்..


இதனால் காயமடைந்த ஜெகதீசன் மற்றும் பாலு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலங்காயம் காவல்துறையினர் இந்நிகழ்வு குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/