மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில் தற்போது தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆண் பெண் இருபாலரும் கலந்துகொண்டு தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பினை பெற வேண்டும் என கூறினார்.
மேலும் உழைப்பவனே உயர்ந்தவன் என்ற வாசகத்தை கூறி அனைவரும் உழைத்தால் மட்டுமே அதற்கான பலனை நாம் அடைய முடியும் உழைப்பவன் நிச்சயம் வாழ்க்கையில் உயர முடியும் என பேசினார், மேலும் அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு பேசுகையில் திராவிடம் என்று சொன்னாலே அது தமிழனின் அடையாளம் அப்படிப்பட்ட திராவிடம் என்ற வார்த்தையை உள்ளடக்கிய இந்த ஆட்சிக்கு 'திராவிடம் மாடல் ஆட்சி என்று பெயர்' இந்த ஆட்சியின் கொள்கை அனைவருக்கும் சமமாக அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்றால் பொருளாதாரம் வளர வேண்டும் பொருளாதாரம் வளர வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும் எனவே அந்த ஒரு நோக்கில் தான் தற்போதைய உள்ள தமிழக அரசு இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை ஏற்படுத்தி உள்ளது என கூறினார்.
மேலும் படித்த ஒவ்வொரு இளைஞனும் வேலைக்கு செல்லும் நோக்கில் ஒவ்வொரு தொழிற்சாலைக்கு சென்று வேலை தேடுகின்றனர் இந்த சூழ்நிலையில் சில நிறுவனங்கள் இளைஞர்களை புறக்கணிக்கின்றனர் இப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக அரசு படித்த இளைஞர்கள் தொழிற்சாலையை தேடி செல்வதை விட தொழிற்சாலை உங்களைத் தேடி வரும் பொழுது உங்களுக்கு தேவையான வேலையை தேடிக் கொள்ளலாம் என்ற நோக்கில் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார்
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய உள்ள தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழில்துறையை மீட்டெடுப்போம் அதுவே எங்களின் தாரக மந்திரம் என கூறினார் அதனை நிறைவேற்றும் நோக்கில் தற்போது தமிழக முழுவதும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது என பேசினார்
மேலும் இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தமிழக முழுவதும் 79 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று உள்ளது தற்போது திருப்பத்தூரில் நடைபெறுவது 80வது தொழில்துறை முகாம் என கூறினார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment