திருப்பத்தூரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 March 2023

திருப்பத்தூரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் உள்ள கிருஷ்ணா சில்க்ஸ் அருகில் இருந்து மொளகாரம்பட்டி பகுதியில் உள்ள ஹோலி கிராஸ் கலைக் கல்லூரி வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை பெண்களுக்கான மார்த்தாண் போட்டி கல்லூரி தாளாளர் சலேத்மேரி மற்றும் கல்லூரி முதல்வர் ரெனிசகாயராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது


இதில் சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் நகர உதவி காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் டாக்டர் தீபா ஆகியோர் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார், இதில் அரசு பள்ளி மாணவிகள் தனியார் பள்ளி மாணவிகள் கல்லூரி மாணவிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.


இந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/