ஆலங்காயம் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் 4 நாட்கள் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி தொடங்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 March 2023

ஆலங்காயம் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் 4 நாட்கள் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி தொடங்கி வைத்தார்.


வாணியம்பாடி அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆலங்காயம் ஒன்றிய இளைஞரணி சார்பில் 4 நாட்கள் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி தொடங்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு கிராமத்தில் ஆலங்காயம் ஒன்றிய இளைஞரணி சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்கள் கிரிக்கெட் போட்டி  நடைபெற உள்ளது.


நிகழ்ச்சிக்கு ஆலங்காயம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக் தலைமை வகித்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.


நான்கு நாட்கள் நடைபெறும் இப் போட்டிகளில் 32 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர். நாள் ஒன்றுக்கு 8 அணிகள் என 4 நாட்கள் இப்போ போட்டிகள் நடைபெறும். இறுதியாக வெற்றி பெற்ற அணிக்கு ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பில் ரூபாய் ஒரு லட்சம்  ரொக்க பரிசும், இரண்டாவது பரிசாக ரூபாய் 75 ஆயிரம என் மொத்தம் எட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.


துவக்க நிகழ்ச்சியில் இளைஞர் அணி ஒன்றிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/