திருப்பத்தூரில் ஏழாவது நாளாக குறவன் இன மக்கள் கூடை பின்னி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 March 2023

திருப்பத்தூரில் ஏழாவது நாளாக குறவன் இன மக்கள் கூடை பின்னி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ரவி தலைமையில் எஸ்சி சான்றிதழ் கேட்டு 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும்  பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் பள்ளியை புறக்கணித்து சான்றிதழ் கேட்டு  இரவு பகல் பாராமல் அங்கேயே 7 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 


பள்ளி மாணவர்கள் முட்டி போட்டு ஜாதி சான்றிதழ்  பிச்சை கேட்கும் போராட்டம்! தர்ணா போராட்டம்! பள்ளி புறக்கணிப்பு போராட்டம், பட்டினி போராட்டம், ஒப்பாரி போராட்டம், என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் குறவன் இன மக்களின் குலத் தொழிலான  கூடை பின்னி நூதன முறையில்  போராட்டம் நடத்தி வருகின்றனர்


- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/