
இந்த நிலமானது 1950 ஆம் வருடம் வெஸ்ஸிபிரவுன் பங்களாவில் வேலை செய்து வந்ததாகவும் அவர் பங்களா ராமனிடம் வாய்மொழியாக உத்தரவாக நிலத்தை ஒப்படைத்து விட்டு சென்றாதாக கூறப்படுகின்றது அந்த நிலம் பங்களா ராமன் அனுபவத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது
அதன் பிறகு கடந்த 73 ஆண்டுகளாக இதுவரை அவர்களுடைய வாரிசுதாரர்கள் இந்த நிலத்தை உரிமை கோரி வரவில்லை. என்று கூறப்படுகின்றது, ஆனால் அந்த நிலத்திற்கு போலியாக பட்டா தயாரித்து பதிவு செய்ய கோடியூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் நலப் பணியாளர் சிவகுமார் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அனுபவத்தில் உள்ள நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் விவசாயம் செய்யும் மேற்படி நபர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் பயமுறுத்தி வருவதாகவும் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அவர்களிடமும் மனு அளித்தனர்.
சர்வே எண் 346 பட்டா எண். 219 கொண்ட இந்த விவசாய நிலத்தை யாருக்கும் பதிவு செய்யக்கூடாது எங்களுக்கு மேலும் நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment