திருப்பத்தூர் அருகே எருது விடும் திருவிழாவிற்கு நேரடியாக ஆய்வு செய்யச் சென்ற மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 March 2023

திருப்பத்தூர் அருகே எருது விடும் திருவிழாவிற்கு நேரடியாக ஆய்வு செய்யச் சென்ற மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் ஊராட்சி ப.முத்தம்பட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர்கள் இளைஞர்கள் தலைமையில் ஆறாம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து எருது விடும் திருவிழா கள ஆய்வுக்காக நேரடியாக சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் ஆய்வற்குப் பின்பு விழாவை கொடி அசைத்து துவக்கி வைத்தார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.


திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்ட இந்த இறுதி விடும் திருவிழாவில் முதல் பரிசாக 77,777 ரூபாய் முதல் கடைசி பரிசு 4000 ரூபாய் வரை 40 பரிசுகள் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடி வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்டது.


இந்த எருது விடும் திருவிழா முறையான அனுமதி வாங்கப்பட்டு தீயணைப்பு துறை காவல் துறை மருத்துவ துறை உதவியுடன் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டும் காளைகளுக்கு மருத்துவ சோதனை செய்யப்படும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/