கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது மாவட்ட ஆட்சித்தலைவர்ஆய்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 March 2023

கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது மாவட்ட ஆட்சித்தலைவர்ஆய்வு.


திருப்பத்தூர் நகராட்சி தண்டபாணி கோயில் தெரு, தர்மராஜா கோயில் தெரு, பேருந்து நிலையம் ஆகிய தெருக்களில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்த ஆய்வுகளின் போது தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள், பூக்கடை கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளிலிருந்து 7 டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட நெகிழி பைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் தர்மராஜா கோயிலுக்கு அருகே நெகிழி பைகளை இருப்பு வைக்கப்பட்டுள்ள ஒரு குடோனிற்கு சீல் வைக்கப்பட்டது.


இந்த ஆய்வுகளின் போது நகராட்சி ஆணையர் திரு.ஜெயராமராஜா, வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம், வருவாய் துறை, நகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad

*/