கந்திலி அருகே குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்த பலி கந்திலி போலீசார் விசாரணை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 March 2023

கந்திலி அருகே குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்த பலி கந்திலி போலீசார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த வெங்கட்ட கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபி சுபித்ரா தம்பதியரின் மூன்றாவது குழந்தை கௌஷிக்(1  1/6) கோபி வழக்கம் போல விவசாய பணிகளை நேற்று மாலை செய்து கொண்டிருந்த போது அவருடைய நிலத்திற்கு அருகில் விவசாய  பயன்பாட்டிற்காக தோண்டப்பட்ட மண் தொட்டி உள்ளது. இதில் தண்ணீர் தேக்கி வைத்து நிலங்களுக்கு பாய்ச்சப்படுகிறது.  

அந்த தொட்டியில் எதிர்பாராத விதமாக குழந்தை விழுந்துள்ளது.  சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடிய போது அருகில் உள்ள மண் தொட்டியில் நீரில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.  அதைத்தொடர்ந்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் குழந்தையின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/