நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்த வேண்டும் என விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம் பிரசுரம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 March 2023

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்த வேண்டும் என விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம் பிரசுரம்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 36 வது வார்டு திருமால் நகர் கவுன்சிலர் வெற்றி கொண்டான். தங்கள் பகுதிக்கு அடிப்படை தேவைகள் குறித்து நகராட்சி ஆணையரிடம் கூறுகையில் தங்கள் பகுதியில் இருந்து எந்த ஒரு வரியும் வருவதில்லை ஆகவே எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் செய்து தர மிகச் சிரமமாக உள்ளது என்று கூறியுள்ளார்.


அதன் காரணமாக 36 வது வார்டு கவுன்சிலர் வெற்றி கொண்டான் திருமால் நகரில்  இன்று வீடு வீடாக சென்று திருப்பத்தூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி குடிநீர் கட்டணம் போன்ற வரிகளை நிலுவை இல்லாமல் செலுத்தினால் மட்டுமே 36 வது வார்டு பகுதிக்கு தேவையான சாலை வசதி குடிநீர் வசதி மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் அரசாங்கத்தாலும் நகராட்சி நிர்வாகதாலும் செய்து தர முடியும் 


எனவே நகர கவுன்சிலர் என்ற முறையில் நகராட்சி நிர்வாகத்திடம் பேசி அனைத்து அடிப்படை வசதிகளும் பெற்றுத் தருவது என்னுடைய கடமை எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் உடனடியாக எவ்வித பாக்கியம் இல்லாமல் செலுத்துவது மக்களுடைய கடமை என விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரச்சுரம்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/