இளைய நகரம் கிராமத்தில் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை- துணை இயக்குனர் ஆய்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 March 2023

இளைய நகரம் கிராமத்தில் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை- துணை இயக்குனர் ஆய்வு.


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட இளைய நகரம் கிராமத்தில் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை வட்டார மருத்துவ அலுவலர் மரு.ச.பசுபதி தலைமையில் நடைபெற்றது.

இக்கண்காணிப்பு நடவடிக்கையின் போது சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது மற்றும் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளதா என கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது, தடுப்பூசி போடாத குழந்தைகளை கண்டறிந்து தடுப்பூசி போடப்பட்டது. இம்முகாமை துணை இயக்குனர் சுகாதார பணிகள்  மரு.செந்தில் நேரில் ஆய்வு செய்தார். 

உடன் மாவட்ட தாய் சேய் நல அலுவலர், மாவட்ட பூச்சியில் வல்லுநர்,மரு. மதன்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சமுதாய நல செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடன் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/