ராஜபாளையம் கிராமத்தில் விவசாய நிலங்களும் விவசாயிகளுக்கும் விவசாயக் கூலிகளுக்கும், காப்புக்காடுகளுக்கு மிக அருகில் உள்ள பொது மக்களுக்கு இடையூறாகவும் மாணவ மாணவிகளுக்கு பெரும் தொல்லையாகவும் சீர்கேடுகளாகவும் உள்ள அரசு மதுபானக் கடையை பல நாள் மனு அளித்தும் இதுவரை மாற்றவில்லை அங்குள்ள பெண்களுக்கு மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்றும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர் அதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பாகிறது என்றும் பொதுமக்கள் கூறினர். உடனடியாக அந்த அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment