திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு பொதுவுடமை நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்ஐசியில் உள்ள பொதுமக்கள் பணத்தை விதிமுறைகளை மீறி பாரத பிரதமர் மோடியின் நண்பர் அதானியின் போலி கட்டமைப்பு கொண்ட நிறுவனங்களுக்கு முதலீடாகவும் கடனாகவும் கொடுத்து பொது மக்களின் பணத்தை தாரை வார்த்து நிலைமையை கேள்விக்குறியாக்கியிருப்பதை கண்டித்து திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி யின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைப்பெற்றது. திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் ஜானி ஜாவித் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பரத் மாவட்ட பொருளாளர் மகேஷ் பாரிவள்ளல் வெங்கடேஷ் கணேஷ்மல் ஒன்றிய தலைவர் முனுசாமி முருகன் முருகன் மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment