திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 March 2023

திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது


திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதி 1973 ஆம் ஆண்டு முதல் முதலில் ஐந்து பெண்களை போலீசாராக நியமித்து பணியமர்த்தியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது வரை 50 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது, மேலும் அதன் காரணமாக காவல்துறையில் பல்வேறு உயர் பதவியில் பயன்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே அதனைக் கொண்டாடும் விதத்தில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலாளர் அன்பரசி தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் கேக் வெட்டியும் கொண்டாடினார்.


இந்த நிகழ்வில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி, திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் துரைராஜ் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மகளிர் போலீசார் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/