திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் குப்பையின் மீது அமர்ந்து நூதன போராட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 March 2023

திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் குப்பையின் மீது அமர்ந்து நூதன போராட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன மேலும் இப்பகுதிகளில் மக்களால் கொட்டப்படும் குப்பைகள் நகராட்சி சார்பில் கொட்டுவதற்கான போதிய அளவு இடமில்லாமல் உள்ளன. அதன் காரணமாக நகராட்சி சார்பில் குப்பை கொட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக திருப்பத்தூர் நகராட்சி பல்வேறு வார்டுகளில் குப்பைகள் அல்லாமல் இருப்பதால்  மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த நிலையில் திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் சேமிக்கப்படும் குப்பைகளை வெங்களாபுரம் பகுதி சாலையின் ஓரத்தில் குப்பை மற்றும் கோழி கழிவுகளை நகராட்சி அதிகாரிகள் கொட்டி விட்டு தீ வைத்துவிட்டு  செல்கின்றனர். 

இதனால் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு நோய் தொற்றும் அபாயமும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக இப்பகுதியில் குப்பைகளை கொட்ட கூடாது என கூறி நகராட்சி அதிகாரிகளிடம்  பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இன்று திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தசரதன் நகராட்சி சார்பில் கொட்டப்பட்டிருந்த குப்பையின் மீது அமர்ந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார் மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்காவிடில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரித்தார்.


- மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/