ப. முத்தம்பட்டி பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்பி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 March 2023

ப. முத்தம்பட்டி பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்பி.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி  பகுதியில் கடந்து சில தினங்களுக்கு முன்பு எருது விடும் திருவிழா நடைபெற்றது.


அப்போது திருப்பத்தூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் கணேஷ்  ப. முத்தம்பட்டி கிராமத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா அமையுங்கள் என்று பகுதி மக்களிடம் கேட்டுள்ளார்.


அதனை ஏற்று ப‌ முத்தம்பட்டி பகுதி கிராம மக்கள் 80 ஆயிரம் மதிப்பில் எட்டு சிசிடிவி கேமராக்களை பொருத்துவதாக உறுதியளித்தனர்.


அதன் பேரில் இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் அப்பகுதி கிராம பகுதிகளில் எட்டு கேமராக்களை பொருத்தினர்.


இந்த நிகழ்வில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் திருப்பத்தூர் கிராமிய உதவி காவல் ஆய்வாளர் அகிலன் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/