மின் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ஏமாற்றிய நபர் தலைமுறைவு! பணத்தை பறி கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் வீட்டின் முன்பு தர்ணா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 March 2023

மின் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ஏமாற்றிய நபர் தலைமுறைவு! பணத்தை பறி கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் வீட்டின் முன்பு தர்ணா.


திருப்பத்தூரில் மின் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ஏமாற்றிய நபர் தலைமுறைவு! பணத்தை பறி கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் வீட்டின் முன்பு தர்ணா.

திருவண்ணாமலை மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தேவராஜ் இவர் திருப்பத்தூரில் உள்ள வெங்களாபுரம் துணை மின் நிலையத்தில் போர் மேனகா வேலை புரிந்து ஓய்வு பெற்றவர்.


இவருடைய மகன்  மகன் சங்கர் (40) திருவண்ணாமலையிலிருந்து வந்து திருப்பத்தூர் ப.முத்தம்பட்டியில்  தங்கி உள்ளார். தனது தந்தை மின் துறையில் வேலை புரிந்து வந்த காரணத்தால் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெங்களாபுரம், கொரட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின் துறை  நிலையங்களில் K2 அக்ரீமெண்ட் என்ற பெயரில் மின் துறைக்கு சம்பந்தமான கம்பம் எடுத்தல், குழி எடுத்தல்,  உள்ளிட்ட வேலைகளை தனியாக ஆள் வைத்து வேலை செய்து வந்ததாக தெரிகிறது.


இதன் காரணமாக திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம்  மின் துறையில் அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக்கூறி சுமார் 40 லட்சத்திற்கும் மேலாக இளைஞர்களிடம் சங்கர் மோசடி செய்து உள்ளார்.


மேலும் அரசு வேலை வாங்கித் தராமல் பணத்தை ஏமாற்றி வந்த   சங்கரிடம் பணத்தை கேட்கும் பொழுது மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். இதன் காரணமாக சங்கரால் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்ட கோபி, திருப்பதி, ஜெயசீலன், உள்ளிட்ட இளைஞர்கள் சங்கரின் வீட்டில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் சங்கர் தலைமறைவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/