ஆனால் தற்போது 20% வன்னியர்கள் இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு கிடைப்பது வெறும் 3 முதல் 4 விழுக்காடு மட்டுமே என கூறி 2020-21இல் மீண்டும் வன்னியர்கள் போராடிப் 10.5 சதவீதம் வன்னியர் உள்ஒதுக்கீடு பெற்றனர்.

இதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்த போதிலும் உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தது. ஆனால் தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் வன்னியர்களுக்கான உரிமையை வழங்க காலதாமதம் செய்வதால்
2023-24 ஆம் கல்வி ஆண்டிலாவது 10.5% இடஒதுக்கீடு கிடைக்க சட்டத்தை தமிழக அரசு மே 31ஆம் தேதிக்குள் நிறைவேற்றி, சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டு, திருப்பத்தூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தோட்டச்சாலையில் அமைந்துள்ள தலமைதாபல் நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தபால் அனுப்பும் போராட்டம் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ பி சிவா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடைபெற்றது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment