திருப்பத்தூரில் திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 April 2023

திருப்பத்தூரில் திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு பொதுவுடமை நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்ஐசியில் உள்ள பொதுமக்கள்  பணத்தை விதிமுறைகளை மீறி பாரத பிரதமர் மோடியின் நண்பர் அதானியின் போலி கட்டமைப்பு கொண்ட நிறுவனங்களுக்கு முதலீடாகவும் கடனாகவும் கொடுத்து பொது மக்களின் பணத்தை தாரை வார்த்து  நிலைமையை கேள்விக்குறியாக்கியிருப்பதை கண்டித்து  திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி யின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைப்பெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசை கூடிய விரைவில் வீட்டிற்கு அனுப்பவும். ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கவும் கோஷங்கள் எழுப்பினர். ராகுல் காந்தியின்  எம்பி பதவியை பறித்த மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறோம். உலகத்திலேயே இந்த சட்டத்தை பயன்படுத்தி எம்பி பதவியை பறித்தது இதுவே முதல் முறை என்றும் ராகுல் காந்தியை திட்டமிட்டு பழிவாங்குகின்றனர் என்றும் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.  


இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைப்பெற்றது. திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் ஜானி ஜாவித் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் பரத் மற்றும் நகர மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் தொண்டர்கள் பங்கேற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/