உமையப்பநாய்க்கனூர் கிராமத்தில் நடமாடும் மருத்துவ முகாம் - ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 April 2023

உமையப்பநாய்க்கனூர் கிராமத்தில் நடமாடும் மருத்துவ முகாம் - ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டாரத்திற்குட்பட்ட நாய்க்கனூர் ஊராட்சிக்குட்பட்ட உமையப்ப நாய்க்கனூர் கிராமத்தில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ச.பசுபதி தலைமையில் நடமாடும் மருத்துவ குழுவின் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம், இலவச நடமாடும் எக்ஸ்-ரே மூலம் காச நோய் கண்டறியும் முகாம் மற்றும் கோடை காலத்தில் வெப்பத்தாக்கு ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஓ.ஆர்.எஸ் வழங்கும் முகாம் நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினராக நாய்க்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. மேகலா திருப்பதி கலந்துகொண்டு சிறப்பித்தார், இந்நிகழ்வின் போது நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் மரு.பிரசாந்த், திருப்பத்தூர் மாவட்ட நலக்கல்வி அலுவலர் பாலுசுந்தரம், ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குரு.சரவணகுமார், நடமாடும் மருத்துவ குழுவினர், நடமாடும் எக்ஸ்-ரே குழுவினர் (காசநோய்), சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் உடனிருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/