திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை கோடை விழா அரங்கில் ஏலகிரி மலைவாழ் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துக்கொண்டு சுமார் 759 மலைவாழ்மக்களுக்கு பல்வேறு துறைகள் சார்பில் சுமார் 5 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை வழங்கினார்
பின்னர் மேடையில் பேசிய அவர், திருப்பத்தூர் மாவட்டத்தை வளர்ச்சி நிறைந்த மாவட்டமாக மாற்ற மக்களோடு மக்களாக இருந்து செயல்படும் ஆட்சியர் வேண்டும் என நினைத்து தமிழக முதல்வரிடம் நான் இந்த ஆட்சியர் தான் வேண்டும் என்று கேட்டு பெற்ற ஆட்சியர் தான் பாஸ்கர பாண்டியன், அவரும் தற்போது திருப்பத்தூரை வளர்ச்சி மிக்க மாவட்டமாக மாற்ற தினமும் மக்களை நேரில் சந்திந்து குறைகளை கேட்டறிந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மலை கிராமம் இந்த ஏலகிரி மலை கிராமம் தான், தமிழகத்திலேயே முதன்முதலாக ஏலகிரிமலையில் தான் எள்ளு வகை பயிர்களை பயிரிட்டப்பட்டது அத்தகைய சிறப்பு வாய்ந்தது இந்த ஏலகிரி, சுற்றுல்லா தளமான இந்த ஏலகிரியை நன்கு வளர்ச்சியடைந்த பகுதியாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது என பேசினார்.
மேலும் இந்த நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார், உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment