திருப்பத்தூரில் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விசிகசார்பில் மிக பிரமாண்டமாக நீளச்சட்டை அணிவகுப்பு - 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 April 2023

திருப்பத்தூரில் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விசிகசார்பில் மிக பிரமாண்டமாக நீளச்சட்டை அணிவகுப்பு - 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நீல சட்டை அணிவகுப்பு மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அணிவகுப்பானது தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் இருந்து அம்பேத்கர் சிலை வரை 3000க்கும் மேற்பட்டோர் நீல சட்டை  அணிந்து பேரணியாக வந்தனர்.  இந்த பேரணியில் கூட்டணி கட்சிகளான திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திராவிட கழகம் மதிமுக என பங்கேற்றது.  


இந்த பேரணியானது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளில்  சனநாயகம் காப்போம் சாதி ஒழிப்போம் என்று கோஷங்களோடு பேரணியாக சென்றனர். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு பங்கேற்றார்.



வாழ்த்துரை வழங்கியவர் மாநில கலை இலக்கிய பேரவை செயலாளர் கவிஞர் யாழன் ஆதி, பின்னர் இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி, உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/