திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு அவ்வை நகர் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் பெட்ரோல் கேனுடன் திடீர் தர்ணா - போலீசார் சமரசம்- பரபரப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 April 2023

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு அவ்வை நகர் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் பெட்ரோல் கேனுடன் திடீர் தர்ணா - போலீசார் சமரசம்- பரபரப்பு.


திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் அப்புனு என்கிற ஏகாம்பரம் (54) இவரது மருமகன் புல் என்கிற ஜெயக்குமார் இவர் கோழி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கந்திலி காவல் நிலைய  காவலர்கள் ஏற்கனவே பழைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் அழைத்து ஆறு மாதங்களுக்கு எந்த குற்ற நடவடிக்கையும் ஈடுபடக்கூடாது என கூறி அனுப்புவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இன்று புல் என்கிற ஜெயக்குமாரை கந்திலி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று வழக்கு பதிந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மாமனார் அப்புனு என்கிற ஏகாம்பரம் அவரது மகள் கைக் குழந்தையுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பெட்ரோல் கேனுடன் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த திருப்பத்தூர் நகரப் போலீசார் அப்புனு மற்றும் அவரது மகளை நகர காவல் துறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/