பத்தாப்பேட்டை கிராமத்தை பசுமையாக்கும் முதற்கட்ட பணியை வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கோ.செந்தில்குமார், மருத்துவர் ச.பசுபதி, மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பார்கவுன்சில் தலைவர் ஏ.சி.தேவக்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தனர்.

அதைத்தொடர்ந்து ஏழை எளிய மாணவ, மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல் மற்றும் இனிப்புகளை வழங்கி தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாடினார். முன்னதாக டாக்டர்.ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் பொருளாளர் சதிஷ்குமார் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். துணைத் தலைவர் உமேஷ் வருகை புரிந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் வருகை புரிந்த அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வினோத் மற்றும் கிருபாகரன் இருவரும் நன்றி தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment