தமிழகத்தில் மற்றொரு ஜல்லிகட்டு போராட்டம் போல மற்றொரு போராட்டம் நடைப்பெறுவதற்கு முன் தமிழக அரசு 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 April 2023

தமிழகத்தில் மற்றொரு ஜல்லிகட்டு போராட்டம் போல மற்றொரு போராட்டம் நடைப்பெறுவதற்கு முன் தமிழக அரசு 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் மற்றொரு ஜல்லிகட்டு போராட்டம் போல மற்றொரு போராட்டம்  நடைப்பெறுவதற்கு முன் தமிழக அரசு 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என தமிழக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்லப்பா வாணியம்பாடியில் பேட்டி.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடியில் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும், சுங்க கட்டண உயர்வை கண்டத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது, இதில் பங்கேற்று பேசிய அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்லப்பா, இந்தியாவிலேயே தமிழக முதல்வர் பதவியேற்றவுடன் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என்று அறிவித்தார் ஆனால் இதுவரையில் அதை நிறைவேற்றவில்லை, உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் 

அடுத்த மாதம், நடைப்பெறுகின்ற லாரி உரிமையாளர்கள் கூட்டத்திலே ஒரு சரியான முடிவு எடுத்து தென்மாநிலங்களில் அனைத்து சுங்கச்சாவடிகளில் மாபெரும் போராட்டம் நடத்தி அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தற்கு உண்டான  அனைத்து ஏற்பாடுகளையும் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சரியான முடிவை அறிவிக்கும் மேலும் நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டருக்கு தங்குதளம் அமைக்கவேண்டும் என முறை இருந்தும் இதுவரையில் அமைக்கவில்லை.

  

இது மாபெரும் ஜல்லிகட்டு போராட்டம் என அறிவிக்கும் வரையில் அரசு அமைதியாக இருக்ககூடாது, உடனடியாக தமிழக அரசு 32 சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி மறுத்தால் அதற்கு மத்திய அரசு  ஏதாவது வழியை காணும் இந்த 32 சுங்கசாவடிகளில் 40 சதவிகிதம் பாராமரிப்பு கட்டணம் வசூலிக்கவேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இல்லையென்றால் இந்த கண்டன போராட்டம் மாபெரும் காலவரையற்ற போராட்டமாக மாறும் என தெரிவித்தார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/