கந்திலி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் 2023மற்றும் 2024 ஆண்டிற்கான வேலை துவக்கத்தை பூமி பூஜை போட்டு துவக்கி ஊராட்சி நிர்வாகம்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சியில் இன்று மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் புதிய வருடத்தில் 2023 மற்றும் 2024 முதல் வேலையை கந்திலி ஊராட்சியில் உள்ள பாரத கோவில், கரக பட்டி, தொப்பல கவுண்டனூர், உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பூமி பூஜை போட்டு துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் பணியாளர்களுக்கு ரூபாய் 294 உயர்த்தப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு கிளைச் செயலர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment