இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மாணவர்களுக்கான வளர் இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி இப்பள்ளியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட புதிய படைப்புகளை ஒன்றாம் வகுப்பு முதல் உயர்நிலைப்பள்ளி படிக்கும் மாணவர்கள் செய்து காட்டி அசத்தினர்.

குறிப்பாக தீ விபத்து காலங்களில் தானாக சென்று தீயை அணைக்கும் விதமாகவும் கண்பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு எதிரே வரும் இடையூறுகளை தகர்க்கும் விதமாக சென்சார் கருவி மூலமாக சிக்னல் கொடுக்கும் விதமான வாக்கிங் ஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு புதிய படைப்புகளை படைத்திருந்தனர்.
இந்த கண்காட்சிக்கு தூய நெஞ்சக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் மார்ட்டின் பிரிட்டோ தாஸ், பர்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் சரண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்தனர்.
இதில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை கண்டு வியந்து பாராட்டினர், மேலும் இதனை தொடர்ந்து ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கான கண்காட்சி தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment